September 9, 2024

யாழ்.நகரிற்கு அருகிலும் காணி பிடிப்பு?

 

தேர்தல் அரசியல் முடிவுக்கு வந்து வெளியே பலரும் விடுக்கப்பட்டுள்ள நிலையில் மக்களிற்காக கட்சி வேறுபாடு கடந்து போராட அவர்கள் களம் புகுந்துள்ளனர்.

இன்றைய தினம் மண்டைதீவில் கடற்படை தளத்திற்கென காணிகளை சுவீகரிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி கூட்டமைப்பு,முன்னணி மற்றும் கூட்டணியென அனைத்து தரப்புக்களதும் களமிறக்கலால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மக்கள் போராட்டங்களில் பெரும்பாலும் எட்டிப்பார்த்திராத ஈ.சரவணபவன் முதல் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் என பலரும் போராட்ட களம் திரும்பியுள்ளனர்.

இதனிடையே முன்னணியின் அடுத்த கட்ட தலைவர்களான சுகாஸ் மற்றும் காண்டீபன் என பலரும் திரண்டு அளவீட்டிற்கு எதிராக குரல் கொடுத்ததையடுத்து அளவீட்டு பணிகள் கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே மண்டைதீவில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் விளையாட்டு மைதானமொன்று அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.