உடனடியாக புறப்பட்டுச் சென்றார் ஜனாதிபதி கோட்டாபய!

உலக பாரம்பரிய சிங்களராஜா வனப்பகுதியை ஒட்டியுள்ள நெலுவ-லங்கா கம சாலையின் கட்டுமானத்தை ஆய்வு செய்ய ஜனாதிபதி இன்று அந்த பகுதிக்கு சென்றுள்ளார்.

இந்த சாலையை நிர்மாணிப்பது சிங்கராஜா வனப்பகுதிக்கு கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் வெளிப்பாடாக உள்ளது.

இந்த சாலையை நிர்மாணிப்பது சிங்கராஜா வனத்துடன் தொடர்புடைய சுற்றுச்சூழல் அமைப்புக்கு ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி முன்பு சாலை மேம்பாட்டு ஆணையம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் ஆணையத்திற்கு அறிவுறுத்தியிருந்தார்.

அறிக்கைகள் வரும் வரை, சிங்கராஜா காடு வழியாக சாலை அமைப்பதை தற்காலிகமாக நிறுத்துமாறு ஜனாதிபதி சமீபத்தில் உத்தரவிட்டார்.

இதேவேளை ஜனாதிபதியுடன் குறித்த பகுதிக்கு வனவிலங்கு மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்கவும் இன்று வருகை தருகிறார்.