September 11, 2024

ஊழ்வினை: நட்டாற்றில் ரணில்?

ரணில் விக்கிரமசிங்கவை அனைத்து ஆதரவாளர்களும் கைவிட்டு வருகின்ற

நிலையில் ஐக்கிய தேசிய கட்சிக்கு புதிய தலைவர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் இன்றைய தினம் இறுதி தீர்மானம் எடுப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் விஷேட செயற்குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. இன்று பிற்பகல் கட்சியின் தலைமையாகமான சிறிகொத்தவில் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது.

கட்சி தலைமைத்துவம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள ஆலோசனைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ரணிலின் நெருங்கிய சகாவான ரத்னபிரியா தாதியர் சங்க தலைவராக இருந்ததுடன் ஜெனீவாவில் இலங்கை அரசை காப்பாற்றுவதில் பங்கெடுத்த ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.