September 6, 2024

கிளிநொச்சியில் கடைவிரிக்கும் டக்ளஸ்?

கிளிநொச்சியில் கால்பதித்துள்ள முன்னாள் ஈபிடிபி பிரமுகர் முருகேசு சந்திரகுமாரின் ஆதரவாளர்களை வளைத்துப்போட டக்ளஸ் மீண்டும் மும்முரமாகியுள்ளார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கிளிநொச்சியில் சி.சிறீதரனிற்கு கரைச்சலை கொடுத்த சந்திரகுமார் சுமார் 12ஆயிரம் வாக்கை கிளிநொச்சியில் மட்டும் பெற்றிருந்தார்.

இந்த வாக்கினை ஈபிடிபிக்கான வாக்காக மாற்ற டக்ளஸ் மீண்டும் சந்திரகுமாருடன் பேரம் பேசியுள்ளார். ஈபிடிபியுடன் இணைவதானால் வடக்கு ஆளுநர் உள்ளிட்ட பேரங்களை சந்திரகுமார் முன்வைத்த போதும் கொழும்பு அதனை கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் மாகாணசபை தேர்தலிற்கு முன்னதாக சந்திரகுமாரை வழிக்கு கொண்டுவர டக்ளஸ் தனது ஆதரவாளர்கள் சகிதம் களமிறங்கியுள்ளார்.

இம்முறை யாழ்ப்பாணம் அ;லலாது கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவராக டக்ளஸ் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு காலூன்ற அவர் முற்பட்டுள்ளார்.

ஏற்கனவே யாழில் அரச நியமனங்கள் மூலம் வாக்கு வங்கியை தக்க வைத்துள்ள டக்ளஸ் தற்போது கிளிநொச்சியிலும் சலுகை அரசியலில் மும்முரமாகலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.