September 11, 2024

அங்கயன் நகர்வு: அலறும் சுமா?

 

ஏற்கனவே யாழ்.மாவட்ட செயலகத்தை தனது கட்டுப்பாட்டினுள் அங்கயன்

கொண்டுவந்துள்ளதான குற்றச்சாட்டுக்களிடையே பொதுத்தேர்தலில் வெற்றிபெற்ற அங்கஜன் இராமநாதனுக்கு உப தலைவர் பதவி வழங்கப்படவுள்ளது என சிங்கள இணையத்தளமொன்றில் செய்தி வெளியிட்டுள்ளது.

சுதந்திரக் கட்சியின் வருடாந்த மாநாடு எதிர்வரும் செப்டம்பர் 2ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

இதன்போது முக்கிய சில பதவிகளில் மாற்றம் ஏற்படக் கூடும் என அக்கட்சி வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி சுதந்திரக்கட்சியின் தலைமைப்பதவியில் இருந்து மைத்திரிபால சிறிசேன விலகுவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதனிடையே அங்கயன் இராமநாதனின் அரசியல் நகர்வுகள் சலுகை அரசியல் சுமந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்களிடையே அச்சத்தை தோற்றுவித்துள்ளது.