März 28, 2024

அம்பலமானது அங்கயனின் அல்வா?

வடகிழக்கில் பட்டதாரி நியமன குழப்பத்திற்கு காரணம் அங்கயனே என குற்றஞ்சுமத்தியுள்ளார் அவர் சார்ந்த சுதந்திரக்கட்சி பிரமுகர் ஒருவர்.

இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர் குறைந்த வருமானம் கொண்ட

குறைந்த வருமானம் கொண்ட 100,000 லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு என்பது கிராம உத்தியோகத்தர் ஊடாகவே ஜனாதிபதி வழங்கினார்.

மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் பதவியை பயன்படுத்தி, யாழ், கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டத்தில் வேலைக்கு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களை களவாக பெற்றுக்கொண்டு அவர்களின் விபரங்கள் அனைத்தையும் குறித்த வேட்பாளர்கள் தரப்பினர் சேகரித்துள்ளனர்.

சேகரிக்கப்பட்ட தகவல்கள் அடிப்படையில் அனைவரையும் ஒவ்வொருவராக தொடர்புகொண்டு உங்களுக்கு வேலை வேண்டும் என்றால் உங்களுடைய குடும்பம் எங்களுக்கே வாக்களிக்கவேண்டும் அல்லது உங்களுடைய விண்ணப்பங்களை நிராகரிப்போம் அல்லது ஜனாதிபதி செயலகத்திற்கு அனுப்ப மாட்டோம் என்று கட்டாயப்படுத்தியுள்ளனர். அதுமட்டும் இன்றி யாருக்கு வாக்களிக்கின்றனர் என்ற தகவலை தம்மால் பெறமுடியும் என்றும் வெருட்டியுள்ளனர்.

அதற்;கு ஒப்புக்கொண்ட நபர்களின் விண்ணப்பங்களை அனுப்பியுள்ளதுடன், மறுத்தவர்கள் விண்ணப்பங்களை அவர்களே வைத்துக்கொண்டுள்ளனர். அத்துடன் அவர்களுக்கு வாக்களிக்க தயாராகவும், குறித்த வேலைவாய்ப்புக்கு தகுதிகள் பெறாத பலரின் விண்ணப்பங்களையும் புதிதாக சேர்த்து அனுப்பியுள்ளனர்.

யாழ், கிளிநொச்சி மற்றும் மன்னாரில் இருந்து வந்துள்ள விண்ணப்பங்களை மீள் பரிசீலனை செய்யவும் உண்மையிலையே வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் ஊடாக விண்ணப்பங்களை அனுப்பியவர்களை மட்டும் இனம்கண்டு வேலைவாய்ப்பு வழங்குவதற்கா தற்காலிகமாக வடக்கிற்கு கிழக்கிற்கு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இதே பிராடுத்தனம் மன்னார் மற்றும் மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளதால் வடக்கு கிழக்கு என இரு மாகாணத்தையும் மறுபரிசீலனைக்கு ஜனாதிபதி செயலகம் உத்தரவிட்டுள்ளது.

வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறும் எந்தவொரு வேட்;பாளரையும் நம்பவேண்டாம் என்று தேர்தல் காலங்களிலும் ஜனாதிபதி அவர்கள் நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தி இருந்தார் என்பதை நினைவுகூரவும்.. குறித்த வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள் மீள் பரிசீலனை செய்து தகுதியானவர்களுக்கு மாத்திரம் வழங்கும் திட்டம் மீள் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.