முதல் நாளே சிதறடித்த சிங்கம்?

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி விக்னேஷ்வரன், நாடாளுமன்றில் நேற்று (20) ஆற்றிய உரையை,    ஹன்சாட்டில் இணைத்துக்கொள்ளக் கூடாதென எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா தலைமையில் நடைபெற்றுவரும் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்துரைத்த அவர்,

“நாடாளுமன்ற உறுப்பினராக நாம் சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளும்போது, நாட்டில் வேறெந்த அரசும் உருவாகுவதற்கு எந்தவொரு வகையிலும் துணைப்போவதில்லை என்றே சத்தியப் பிரமாணம் செய்துக்கொள்கிறோம்.

“முழு நாடும் இலங்கையர்கள் என்று தங்களை ஏற்றுக்கொள்ளக் கூடிய இடத்துக்கு நாம் வந்திருக்கிறோம். ஆனால், நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய சீ.வி.விக்னேஸ்வரன், இலங்கையின் பூர்விகக்குடிகள் தமிழர்கள் என்றும், தமிழ்மொழியே இலங்கையில் முதலில் தோன்றிய மொழி எனவும் கூறியிருந்தார்.

“இந்த உரை, நாடாளுமன்ற ஹன்சாட்டில் பதிவு செய்யப்படுவதுத் தவறு. இலங்கையின் பூர்விகக்குடிகள் யார் என்பதுத் தொடர்பில் தங்களுக்குள் தனிப்பட்டக் கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் அதில் ஹன்சாட்டில் பதிவு செய்யப்படுவதுத் தவறு. எனவே அவற்றை நாடாளுமன்ற ஹன்சாட்டிலிருந்து நீக்க வேண்டும்” என்றார்.

இதற்குப் பதிலளித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இதுத் தொடர்பில் தான் ஆராய்வதாகத் தெரிவித்தார்.