September 7, 2024

தொடங்கியது 9வது நாடாளுமன்ற அமர்வு!

இலங்கையின் 9 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடர் இன்று முற்பகல் 9.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளது.

ஆரம்ப நடவடிக்கையாக சபாநாயகர் தேர்வு  நடைபெற்ற நிலையில் அப்பதவிக்கு மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவாகியுள்ளார்.

பிரதி சபாநாயகராக ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய நியமிக்கப்படுவார்.

உறுப்பினர்களின் சத்தியப்பிரமாணம், சபாநாயகரின் குறுகிய உரை ஆகியன முடிவடைந்த பின்னர் நாடாளுமன்றம் பிற்பகல் 3 மணிவரை ஒத்திவைக்கப்படும்.

3 மணிக்கு நாடாளுமன்றத்துக்கு வருகை தரும் ஜனாதிபதி கொள்கை விளக்க உரையுடன் (சிம்மாசன உரை) நாடாளுமன்ற செயற்பாடுகளை ஆரம்பித்துவைப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.