September 7, 2024

மட்டக்களப்பில் விபத்து!

மட்டக்களப்பு கல்குடா பிரதேசத்தில் சிறிய பாரவூர்தி ஒன்று தொடரூந்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது.இச் சம்பவம் நேற்று சனிக்கிழமை (15) மாலை இடம்பெற்றுள்ளதாக கல்குடா காவல்துறையினர் தெரிவித்தனர்.

மட்டக்களப்பில் இருந்து பாசிக்குடா நோக்கி பயணித்த சிறிய பாரவூர்தி தனது வேக கட்டுப்பாட்டை இழந்து கல்குடா தொடரூந்து நிலைத்திற்கு அருகில் உள்ள பாதுகாப்பு கடவையை உடைத்துக் கொண்டு தொடரூந்துடன் மோதியதில் இவிபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் பாரவூர்தி  ஓட்டுநர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மட்டக்களப்பு சேத்துக்குடாவைச் சேர்ந்த செபஸ்தியன் அருள்நாதன் (வயது48) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.