September 16, 2024

டோனி மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டும்..!

இந்திய அணியின் கிரிக்கெட் நட்சத்திரம் டோனி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவத்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்தது.

எனினும், கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள் உட்பட அனைவரும் டோனியை பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது குறித்து கருத்து தெரிவித்து பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி , உலகக் கோப்பை வென்ற டோனி 2024ல் மக்களவை பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று கூறினார்.

இதுகுறித்து சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டர் பதிவிட்டதாவது, கிரிக்கெட்டில் இருந்து மட்டும் தான் டோனி ஓய்வுபெற்றுள்ளாரே தவிர வேறு எதிலிருந்தும் இல்லை.

முரண்பாடுகளுக்கு எதிராக போராடக்கூடிய டோனியின் திறமை மற்றும் அவர் கிரிக்கெட்டில் நிரூபித்த அணியின் ‘எழுச்சியூட்டும் தலைமை’ பொது வாழ்க்கையில் தேவை, எனவே அவர் தேர்தலில் போராட வேண்டும் என்று பாஜக தலைவர் கூறினார்.