September 23, 2023

கண் திறந்தார் எஸ்பிபி

கோவிட்-19 கொறோனா நுண்மித் தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிர்காப்பு மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் சிகிச்சை பெற்றுவரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மூன்று நாட்களின் பின்னர், இன்று மயக்க நிலையில் இருந்து மீண்டு கண் திறந்ததாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று முன்தினம் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதும் நேற்றைய தினம் முன்னேற்றம் கண்டதாக அறவிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று அவர் கண் திறந்ததாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே எஸ்பிபியின் மனைவி சாவித்திரிக்கும் கொறோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அதே மருத்துவமனையில் அவருக்கும் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.