Oktober 15, 2024

எனக்கு தேசியப்பட்டியல் வேண்டாம்… சஜித் அணி

ஐக்கிய மக்கள் சக்திக்கு, இம்முறை நடந்த பாராளுமன்றத் தேர்தலின், மூலம் 7 தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்திருந்தன.

இதனை பங்கிட்டுக் கொள்வதில் பங்காளிக் கட்சிகள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் முரண் பட்டுக்கொண்டன.

குறிப்பாக சிறுபான்மை கட்சிகள் சார்ந்த (மனோ, றிசாத், ஹக்கீம்) தரப்புக்கள் தமக்கு ஒவ்வொரு தேசியப் பட்டியல் வீதம் 03 தேசியப் பட்டியல் ஆசனங்களை கோரியிருந்தன.

இந்நிலையில் நெருக்கடியை தவிர்க்கவும், ஐக்கிய மக்கள் சக்தியின் ஒற்றுமையை தக்கவைக்கவும் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பார்க்கீர் மாக்கார் தனக்கு ஒதுக்கப்பட்ட தேசியப் பட்டியல் ஆசனத்தை விட்டுக்கொடுக்க தீர்மானித்துள்ளார்.

எனினும், சஜித் பிரேமதாச உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இம்தியாஸ் தேசியப் பட்டியலிலிருந்து ஒதுங்கக் கூடாதென வலியுறுத்தியுள்ளனர்.

சிறுபான்மைக் கட்சிகளும், இம்தியாஸ் எக்காரணம் கொண்டும் தேசியப் பட்டியல் ஆசனத்தை விட்டுக்கொடுக்கக் கூடாது. அவரின் சேவை நாட்டுக்கும் சமூகத்திற்கும் தேவையென சுட்டிக்ககாட்டியுள்ளன.

இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார வியாழக்கிழமை 13 தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைத்த ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினர்களில் இம்தியாசின் பெயரும் உள்ளீர்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.