März 28, 2024

சுமந்திரனுக்கு விழுந்த கள்ள வோட்டுக்கு துணை போனது கமல் குணரட்ண தான் ?

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஸ்ரீதரன் சில வழக்குகளின் சிக்கி, அதனை தீர்ப்பதற்காக சுமந்திரனிடம் சென்று தற்போது அடிமையாக ஆகி விட்டார். அவரை சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பில் உள்ள பயங்கரவாதப் பிரிவினர் அழைத்தவேளை. ஸ்ரீதரன் ஓடிச் சென்று சுமந்திரனிடம் உதவி கோரியுள்ளார். சுமந்திரன், தனக்கு கமல் குணரட்ணவை தெரியும் என்றும். அவரிடம் உன்னை அழைத்துச் செல்கிறேன் என்றும் கூட்டிச் சென்றுள்ளார். இதனூடாக கமல் குணரட்ணவுக்கும் சுமந்திரனுக்கும் இடையே உள்ள தொடர்பு வெளியாகிறது.
மேலும் நடந்து முடிந்த தேர்தலில், யாழ் மத்திய கல்லூரியில் வைத்து வாக்கு எண்ணும் போது மதியம் 3 மணிக்கே அவர்கள் அதனை எண்னி முடித்து விட்டார்கள். அதன் நிலவரப்படி. முதலாவது இடத்தில் ஸ்ரீதரனும், இரண்டாம் இடத்தில் சசிகலாவும், மூன்றாம் இடத்தில் சரவணபவானும். 4ம் இடத்தில் சித்தார்த்தனும். கடைசியாக 5ம் இடத்தில் தான் சுமந்திரன் இருந்துள்ளார். ஏன் எனில் யாழ் மக்கள் அவருக்கு வாக்கு போடவே இல்லை. இதுவே முடிவாக இருந்துள்ளது.
இந்த முடிவை அறிந்த சுமந்திரன், கமல் குணரட்ணவின் உதவியோடு STF என்கின்ற அதிரடிப்படையோடு யாழ் மத்திய கல்லூரிக்கு சென்றுள்ளார். இதேவேளை கிளிநொச்சியில் இருந்து வந்த வாக்கு பெட்டிகளில் ஸ்ரீதரனுக்கு விழுந்த வாக்குகளோடு சேர்த்து, சுமந்திரனுக்கு விருப்பு வாக்குகளை கீறியுள்ளார்கள். அதாவது அவசர அவசரமாக மீண்டும் வாக்கு எண்னுவதாக கூறி, அங்கே வேலை பார்த்த சுமந்திரனின் கைக் கூலிகள், விருப்பு வாக்கில் சுமந்திரனின் பெயருக்கு பேனையால் கீறிவிட்டு. அப்படியே எண்ணியுள்ளார்கள்.
இதனூடாகவே அவர் 27,000 ஆயிரம் விருப்பு வாக்குகளை பெற்றதாக கூறப்படுகிறது. கொழும்பு சென்று இடைக்கால தடை வாங்கினால் கூட. இனி வாக்குகளை மீள எண்ணினாலும், சுமந்திரன் 27,000 வாக்குகள் பெற்றார் என்று தான் திரும்பவும் முடிவு வரப்போகிறது. இதேவேளை மிகவும் கவனமாக திட்டமிட்டு தனது கள்ள வாக்குகளை போட வைத்துள்ள சுமந்திரன், தன்னை 2ம் நிலைக்கு உயர்த்தியுள்ளார். இனி வாக்குகளை எண்ணி ஏதாவது பிழைத்தால் கூட, 3ம் நிலையில் உள்ள சித்தார்தனே ஆசனத்தை இழப்பார். சுமந்திரன் தப்பி விடுவார்.
அந்த அளவு சுமந்திரனுக்கு புலனாய்வு துறையினுள் பெரும் செல்வாக்கு இருக்கிறது. யாழில் தனக்கு தேவையான தேர்தல் அதிகாரிகளை போடுவது. வாக்கு எண்ணும் இடத்தில் தனது ஆதரவாளர்களை போடுவது தொடக்கம், புலனாய்வு துறையின் உதவியுடன் சுமந்திரன் செயல்பட்டு. பல தில்லு முல்லுகளை விட்டு ஆசனத்தை கைப்பற்றியுள்ளார். அடுத்த திட்டம் அவரது அடிமையான ஸ்ரீதரவை வைத்து, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் பதவியை கைப்பற்றுவது தான். மேலும் சொல்லப்போனால்,
மாவை சேனாதிராசாவின் மகனை வேண்டும் என்றே STF கொண்டு தாக்கியது சுமந்திரன் தான். இதனூடாக சுமந்திரன் மாவை சேனாதிராசாவையும் அச்சுறுத்தி அடி பணியவைத்துள்ளார். இதுவே இன்றைய நிலவரம் ஆகும்.