September 11, 2024

102 நாட்கள் கடந்த நிலையில் நியூசிலாந்தில் மீண்டும் கொரோனா!

நியூசிலாந்தில் 102 நாட்கள் கடந்த நிலையில் கொரோனா தொற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நான்கு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து நியூசிலாந்தில் மிகப் பொிய நகரமான ஆக்லாந்தில் மூன்று நாள் முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு புதிய வழக்குகளும் அனைத்தும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். சமீபத்தில் யாரும் வெளியே பயணம் செய்யவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவர்களுடன் இருந்தவர்களை கண்டறிவதில் அதிகாரிகள் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.