வெள்ளைச் சிற்றூர்தி! கடத்தப்பட்டார் பெண்!!

யாழ்ப்பாணம், நீர்வேலி வடக்கில் வெள்ளைச் சிற்றூர்த்தியில் வந்த இனம் தெரியாத மர்ம கும்பலால் இளம் யுவதி ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை காவல்நிலையத்தில் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.நீர்வேலி வடக்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு வெள்ளை சிற்றூர்த்தியில் சென்ற நான்கு பேர் கொண்ட குழுவினர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்களை தாக்கியுள்ளனர்.

வீட்டில் இருந்த 20 வயது யுவதியை பலாத்காரமாக கடத்திச் சென்றுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கோப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.