September 9, 2024

கணேஸ் வேலாயுதத்திற்கு ஒரு சந்தரப்பம் ?

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்கள் தொடர்பிலான் இறுதித் தீர்மானம் இன்று (10) அறிவிக்கப்படவுள்ளது.

வடக்கில் அக்கட்சியில் போட்டியிட்ட கணேஸ் வேலாயுதத்திற்கு ஒரு சந்தரப்பம் வழங்க கோரப்பட்டள்ளது

கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், கட்சியின் தலைமையகத்தின்  கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெறவுள்ளதாக, அதன் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றவர்கள் மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கும் கட்சிகளின் தலைவர்களுக்கு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய, தமிழ் முற்போக்கு கூட்டணி உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைக்கப்பெற்றுள்ள 07 தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கு தற்போது வரை, சிலரின் பெயர்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளதாகவும் திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளார்.