April 19, 2024

விமான விபத்தை பற்றி இதுவரை தெரிய வந்த விபரங்கள்:

விமானத்தை இயக்கிய தலைமை விமானி கேப்டன்.தீபக் சாத்தே இந்திய விமான படையில் விங் கமேண்டராக பணியாற்றியவா்.

விமானத்தை தரையிறக்க பயன்படும் கியா் (LANDING GEARS) வேலை செய்யவில்லை.

விமானி மூன்று முறை வானத்தில் வட்டமடித்து இருந்த எரிபொருளை காலியாக்கினாா். இதுவே விமானம் முழுமையாக தீப்படிக்காமல் காப்பாற்றியது. அதனால் தான் விமானத்திலிருந்து புகை எதுவும் வரவில்லை.

விமானத்தை தரையில் இறக்கும் முன்பு இஞ்சினை அணைத்திருக்கிறாா் விமானி.
மூன்று முறை முயற்சித்த பிறகு சக்கரங்களை கீழிறக்காமல்(BELLY LANDING) விமானத்தை தரையிறக்கியிருக்கிறாா்.

விமானத்தின் வலதுபக்க இறக்கை நொறுங்கி போயிருக்கிறது.
விமானி தன் உயிரை தியாகம் செய்து 180 பயணிகளின் உயிரை காப்பாற்றியிருக்கிறாா்.

இவர் மனைவியையும் தன்னுடைய இரு மகன்களையும் விட்டு சென்றிருக்கிறாா். தம்பதியா் இருவரும் மும்பை ஐ.ஐ.டியில் படித்தவா்கள். நாக்பூரில் இவரது தாயாருடன் வசிக்கும் இவரது தந்தை ஓய்வு பெற்ற பிரிகேடியா் வசந்த் சாத்தே. இவருடைய சகோதரா் இந்திய இராணுவத்தில் பணியாற்றிய கேப்டன். விகாஸ். ஜம்மு பகுதியில் பணியாற்றும் பொழுது தேசத்திற்காக தன் உயிரை தியாகம் செய்தவா்.

இவருடன் அந்த விமானத்தின் சக விமானியாக இருந்தவா் திரு.அகிலேஷ்குமாா். இவரும் இந்த விபத்தில் தன்னுடைய உயிரை தியாகம் செய்திருக்கிறாா்.

இவா்களை போன்ற மாவீரா்கள் தங்கள் உயிர்களை தியாகம் செய்து தேசத்து மக்களின் உயிரை காத்து வருகிறாா்கள்.

„வீரவணக்கங்கள் விமானிகளே வீரவணக்கங்கள்“