April 20, 2024

வீடு,மீன்,துவிச்சக்கரவண்டி இடையிடையே கை?

வாக்கெண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் வீடு,சைக்கிள் மற்றும் மீன் என மாறி மாறி கட்சிகள் முன்னணிக்கு வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோப்பாய்,சாவகச்சேரி மற்றும் சில இடங்களில் மீன் முன்னணியிலுள்ளதாக தெரியவருகின்றது.
அதேவேளை ஏனைய இடங்களில் வீடு மற்றும் சைக்கிள் சின்னங்கள் சம பலத்துடன் போட்டியில் இருப்பதாக தெரியவருகின்றது.
இதனிடையே பரவலாக கை சின்னமும் வாக்குகளை பெற்றிருப்பதால் அது தாக்கத்தை செலுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது.
வாக்கெண்ணும் இடங்களில் தொலைபேசி பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே இன்னும் ஒரு மணி நேரத்தில் தபால் மூல உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.