இது யாழில் வாக்குகள் எண்ணும் திணைக்களத்தினுள் சென்று வந்த நபர் ஒருவர் சொல்லும் தகவல். வாக்கு எண்ணி முடிக்கப்பட்டுள்ள நிலையில். யாழில் மாவை சேனாதிராசும், ஸ்ரீதரனும் மற்றும் இறந்த ரவிராஜின் மனைவி, சசிகலாவும் மட்டுமே வென்றுள்ளார்கள். சுமந்திரனுக்கு 4வது இடம் தான். இதனால் சுமந்திரன் படு தோல்வி அடைந்துள்ளார். ஆனால் 2 பஜோரோ வாகனத்தில் வந்து இறங்கிய சுமந்திரனின் ஆதரவாளர்கள் மற்றும் அடியாட்கள், சசிகலாவை ராஜினாமா செய்யும் படி மிரட்டி வருவதாக கூறப்படுகிறது.

உங்களை நான் தான் அரசியலுக்கு கொண்டு வந்தேன், எனவே எனக்காக இந்த பதவியை நீங்கள் விட்டு தரவேண்டும் என்று சுமந்திரனின் அடியாட்கள் மற்றும் சுமந்திரன் நேரடியாகவே சசிகலாவை மிரட்டுவதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த செய்தியை எம்மால் உறுதி செய்ய முடியவில்லை. 2 பேருடன் பேசிய நிலையில். இவர்கள் இருவருமே இந்த சம்பவத்தை ஒத்துக் கொள்கிறார்கள்.