September 16, 2024

அம்பாறை மாவட்ட வாக்களிப்பும் நிலவரமும்

அம்பாறை மாவட்டத்தில் தேர்தல் வாக்களிப்புக்கள் 10:00 மணி வரையில் 22 வீதமான வாக்களிப்புகள் நடைபெற்றுள்ளன என்று மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் அறிவித்துள்ளார். இத் தேர்தலானது சுகாதார நடைமுறைக்கமைய இடம்பெற்று வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

  திகாமடுல்ல தேர்தல்  மாவட்டத்தில்  அம்பாறை ,பொத்துவில் , சம்மாந்துறை  ,கல்முனை,ஆகிய தேர்தல் தொகுதிகளில்  அமைக்கப்பட்டுள்ள 525  வாக்களிப்பு நிலையங்களில்  513979 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளநர்.
கல்முனை  தேர்தல் தொகுதியில் 76283  பேரும் சம்மாந்துறை  தேர்தல் தொகுதியில் 89057 பேரும் பொத்துவில்  தேர்தல் தொகுதியில் 143229  பேரும்  அம்பாறை   தேர்தல் தொகுதியில் 174385  பேரும்  வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.