தேர்தல் விதிமீறலில் ஈடுபட்ட எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்கள் தேர்தல்கள் திணைக்களத்தினரால் மடக்கிப்பிடிப்பு!

வடமராட்சியில் தேர்தல் விதிமீறலில் ஈடுபட்ட எம்.ஏ.சுமந்திரனின் ஆதரவாளர்கள் தேர்தல்கள் திணைக்களத்தினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டனர்.

மாலைசந்தி சின்னத்தம்பி வித்தியாலய வாக்குச்சாவடிக்கு அருகில்- வைரவர் கோயிலடியில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் இளைஞர் அணியினர் நின்று எம்.ஏ.சுமந்திரனிற்கு வாக்களிக்க வேண்டும் என வாக்காளர்களை அவர்கள் வற்புறுத்தி வந்தனர்.

இது தொடர்பில் தேர்தல் திணைக்கள கண்காணிப்பாளர்களிற்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற கண்காணிப்பாளர்களும் பொலிசாரும் அவர்களை மடக்கிப்பிடித்தனர்.

தற்போது அவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்கள்.