Oktober 15, 2024

முல்லை:முட்டி மோதிக்கொள்ளும் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகள்

தமிழ் தேசியக் கூட்டமைப்பினை ஒரு கட்சியாக பதிவு செய்யாததன் விளைவை நேற்றைய தினம் முல்லைத்தீவு சந்தித்துள்ளது .அதாவது கூட்டமைப்பில் இருக்கின்ற பங்காளிக் கட்சிகளின் ஒற்றுமையின்மையை இன்றைய தினம் மிகவும் தெளிவான வகையிலே முல்லைத்தீவு பகுதியில் பங்காளி கட்சிகள் வெளிப்படுத்தியுள்ளது.
அந்த வகையிலே முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான டெலோ மற்றும் புளொட் ஆகிய கட்சிகள் ஒன்றினையாமல் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் 500 மீட்டர் இடைவெளியில் இரண்டு வெவ்வேறான பிரச்சாரக் கூட்டங்களை ஒழுங்கு படுத்தியிருந்தனர். இந்த நிலையில் கூட்டமைப்புக்குள் இருக்கும் பங்காளிக் கட்சிகளின் ஒற்றுமையின்மையை வெளிப்படுத்தியுள்ளது இதிலிருந்து கூட்டமைப்பின் ஒற்றுமையின்மை திட்டவட்டமாக தெரிய வருகின்றது.
ரெலொ கட்சியினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அனுமதியை பெற்றிருந்தாலும் தங்களது வேட்பார்களையே முன்னிலைப் படுத்தியிருந்தனர். அதிலும் தங்களது கட்சியில் போட்டியிடும் சக வேட்பாளரும் முன்னாள்  மாகாண சபை உறுப்பினருமான உறுப்பிருமான மயூரன் வெட்டிவிடப்பட்டிருந்தது வேதனையே. பின்னர் சுதாரித்துக் கொண்ட புளொட் சார்பான வேட்பாளர் தான் தனியாக அநுமதி பெற்று தனியாக கூட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தார். இம்முறையும் கூட்டமைப்பின் ஒன்பது வேட்பாளரும் ஒரே மேடையில் மக்கள் முன் தோன்ற முடியாத துர்ப்பாக்கிய நிலை மீண்டும் அரங்கேறியமை அவலமானதே.
ஒன்பது பேருமே ஒன்றாக மேடையேற முடியாதவர்கள் தான் மக்களுக்காக ஒன்றினைவார்களா?
தமது கூட்டமைப்பு குள்ளேயே பிரச்சனைகளை தீர்க்க முடியாமல் ஒற்றுமை இல்லாமல் அலையும் கூட்டமைப்பு மக்களை எவ்வாறு ஒற்றுமைப் படுத்தப் போகிறார்கள்?
இவர்களா தமிழ் மக்களின் உரிமைக்காக தமிழ் மக்களின் விடிவுக்காக போராடுவார்கள்?
மக்களே உங்கள் வாக்கு யாருக்கு என்பதை இதிலிருந்து முடிவெடுத்துக்கொள்ளுங்கள்