September 16, 2024

பத்து லட்சம் தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் : சீ.வி.விக்னேஸ்வரன்!

நாட்டில் இருந்து பத்து இலட்சம் தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற வேட்பாளருமான சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,

பத்து இலட்சம் தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதால் எதிர்வரும் 15 வருடங்களுக்குள் தமிழ் மக்களின் இருப்பு கேள்விக்குள்ளாக்கப்படும்.

மக்கள் கொள்கை அடிப்படையில் ஒற்றுமை ஏற்படும் பட்சத்திலேயே எந்த தரப்புடனும் இணைந்து பயணிக்க முடியுமென அவர் தெரிவித்துள்ளார்.