September 23, 2023

கருணாவின் அழுத்தம்!! போராட்டம் இடை நிறுத்திய காவல்துறை!

வடக்கு -கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் தமது உறவுகளை தேடி ஆர்ப்பாட்டம் இன்று (27/07/2020) செங்கல்லடி சந்தியில் நடைபெற இருந்தது.
இது கோவிட் 19 நடைமுறைக்கு அமைய போலீசாரின் அனுமதியும் பெற்று, 100 பேருக்கும் குறைவானவர்கள் என்ற போலீசாரின் நிபந்தனைக்கு ஏற்பவே ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இதில் பெரும்பாலும் கருணா மாற்றும் பிள்ளையான் குழுவினரால் பாதிக்கப்பட்ட தாய்மாரும் உறவுகளுமே கூடி தமது ஆதங்களை வெளிப்படுத்திக்கொண்டிருந்தனர்.
இதை அறிந்த கருணா, ஏறாவூர் காவல்துறை அதிகாரியை தூண்டி, ஏறாவூர் காவல்துறை ஊடாக இவ் ஆர்ப்பாட்டத்திற்கு நீதிமன்ற தடையுத்தரவை வாங்கியுள்ளார்.
இத்தடைத்தரவை காட்டி, கூடியிருந்த உறவுகளை மிரட்டி, ஏறாவூர் காவல்துறை கலைந்து போகும்படி உத்தரவிட்டுள்ளனர்.
ஏற்பாட்டாளர்களையும் வரும் 12ம் திகதி நீதிமன்றில் ஆஜராகும்படி உத்தரவிட்டுள்ளனர்.