சீறிதரனின் கோட்டைக்குள் கொடும்பாவி?

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தனது கோட்டை என்று அடிக்கடி உச்சரிக்கும் வட்டக்கட்சியில் இளைஞர்கள் பலர் இணைந்து அவரின் கொடும்பாவியை எரித்து கோசம் எழுப்பியதால் அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்.
கிளிநொச்சி வட்டக்கச்சியில் பிரதான வீதியில் சுமந்திரன், சிறீதரன் ஆகியோருக்கு கொடுப்பாவி அமைத்து குற்ற  சாசனம் வாசித்து இளைஞர்கள் எரியூட்டியுள்ளனர்.
குறித்த சம்பவத்தின் போது இளைஞர்களால் வாசிக்கப்பட்ட  குற்ற சாசனத்தில்,
உலகில் மிக மோசமான இனப்படு கொலையாளியான கிட்லரின் ஆட்சியை விட தமிழ் இனத்துக்கு எதிராக பெரும் பொய் பிரசாரங்களை செய்யும் சுமந்திரனின் குற்றம் தெளிவுற நிருபிக்கப்படுகின்றது. இதன்மூலம் இவர் தமிழனத்துக்கெதிரான அவமானச் சின்னமாக காட்சியளிக்கின்றார். இத்தகைய அவமானச் சின்னம் தமிழ் அரசியல் பரப்பிலிருந்து அகற்றப்படவேண்டும் என்பது முதலாவது தீர்ப்பாகும்.
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரான இவர் சிங்கள இனவாதத்தின் உளவாளியாக  தமிழரசுக்கட்சிக்குள் நுழைந்து சர்வதேச போர்க் குற்றவாளிகளை சிங்கள இனவாதிகளை பாதுகாப்பதற்காக வாங்கிய தரகுப் பணத்துக்காக விசுவாசமாக பணியாற்றி சர்வதேச அரங்கில் போர்க்குற்ற விசாரணையை நீர்த்துப்போகச் செய்தார். சர்வதேச அரங்கில் தமிழ்மக்களை முட்டாள்கள் என்றெண்ணி போர்க்குற்ற விசாரணை முடிவடைந்து விட்டதாக பெரும் பொய் சொன்னார். பொய் சொன்னமை பெரும் குற்றம்.
2018 இற்குள் அரசியல் தீர்வின்றேல் பதவி விலகுவேன் என்று கூறியவர் இன்றுவரை பதவி விலகவில்லை.
தமிழ் மக்களின் உரிமைகளை விற்றுப்பிழைக்கும் இவர் தண்டிக்கப்படவேண்டியவராவார்.
இதேவேளை சிறீதரன் குறித்து அலிபாபா சுமந்திரனை விடவும் சிறீதரன் ஒருபடி நம்பிக்கைத் தூரகமிழைத்துள்ளார். அவர் புலிவேடம் தரிப்பதும் மாவீரர் நாளை முன்னிட்டு கொண்டாடுவதும் தியாகி திலீபனுக்கு தீபமேற்றி இலட்சிய வீரன்போல் தன்னைக் காட்டி மக்களை ஏமாற்றுவது படுமோசமான குற்றம் ஆகையால் சுமந்திரனுக்கு வழங்கப்படும் தண்டனையில் இரட்டிப்புத் தண்டனை இவருக்கு வழங்கப்டுகின்றது.
இவ்வாறு குறித்த குற்ற சாசனம் வாசிக்கப்பட்டு இருவரின் கொடும்பாவிகளும் கொளுத்தப்பட்டன.
சிறீதரன் தனது கோட்டை என்று வர்ணிக்கும் வட்டக்கட்சி மண்ணில் அப்பகுதி இளைஞர்களால் கொடும்பாவி எரிக்குமளவுக்கு வந்திருக்கின்றமை அவரின் தோல்வி நிலையினை காட்டுகின்றது.