கொரோனாவை ஒழிக்க பறக்கும் சிகிச்சை நிலையம் – ரணில் அறிவிப்பு!

தேர்தலின் பின்னர் அமைக்கப்படும் தமது அரசாங்கத்தின் கீழ் கொரோனாவை ஒழிப்பதற்காக பறக்கும் சிகிச்சை நிலையத்தை உருவாக்க உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

தென் மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

கொரோனா நோயாளிக்கு தேவையான சிகிச்சை வழங்கப்படும் வரை அடிப்படையான சிகிச்சைகளை இந்த பறக்கும் சிகிச்சை நிலையத்தில் வழங்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் தான் 1990 சுவசெரிய அம்பியூலன்ஸ் சேவையை அறிமுகப்படுத்தியதாகவும் பறக்கும் சிகிச்சை நிலையத்தை உருவாக்குவது தனது அடுத்த இலக்கு எனவும் உலகில் எந்த நாட்டிலும் இப்படியான பறக்கும் சிகிச்சை நிலையங்கள் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.