März 29, 2024

செல்போனை இந்த 10 இடங்களில் வைத்தால் கட்டாயம் ஆபத்து.!

உலகளவில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. நம் வாழ்வின் ஒரு முக்கிய அங்கமாகவே மாறிவிட்ட போன்களை எப்பொழுதும் நம் கைகளிலேயே வைத்திருக்கிறோம்.

ஆனால், இவற்றை வைக்கவே கூடாத 10 ஆபத்தான இடங்களும் உள்ளது அவற்றை பார்க்கலாம். போகும் எல்லா இடங்களுக்கும் நமது போன்களை தூக்கிச் செல்லும் பழக்கத்திற்கு ஆளாகிவிட்டோம்.

ஸ்மார்ட்போனை, உங்கள் பேண்ட்டின் பின்புற பாக்கெட்டில் வைப்பது என்பது இப்பொழுது ஸ்டைலாகிவிட்டது. இன்னும் சிலருக்கு மிகவும் வசதியானதாக இருக்கலாம், ஆனால் இப்படி செய்வதால் போனில் ஊழல் டச் ஸ்கிரீன் உங்கள் பின்புறத்தில் பட்டு ஆன் செய்யப்பட்டு சூடாக வாய்ப்புள்ளது.

போனை பின்புறத்தில் வைப்பதினால் அதிகப்படியான எமெர்ஜெண்சி அழைப்புகளை அழைக்கவும் வாய்ப்புள்ளது. பயனருக்கே தெரியாமல் அவசர உதவி எண்ணை அழைத்தவர்களின் எண்ணிக்கை 30 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. வயிறு மற்றும் கால்களில் நீங்கள் அடிக்கடி வலியை உணர்ந்தால், இந்த நடவடிக்கையும் ஒரு காரணமாக இருக்கலாம்.. போனை உடைப்பதற்கும், இழப்பதற்கும் வாய்ப்பு அதிகம்.

போனை முன் பாக்கெட்டில் வைப்பது தான் மிகவும் வசதியானது. ஆனால் இதன் காரணமாக ஆண்களின் உடல்நிலை பெரிதும் பாதிக்கப்படும். ஸ்மார்ட்போனிலிருந்து வெளிவரும் மின்காந்த கதிர்வீச்சு விந்தணுக்களின் தரம் மற்றும் அளவை மோசமாகப் பாதிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான ஆண்களின் உடலுறுப்பு நோய்களுக்கு பின்னணியில் ஸ்மார்ட்போனின் கதிர்வீச்சு காரணமாக கூறப்படுகிறது. ஆண்மை குறைவிற்கு இந்த பழக்கமே முதல் காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.

பேண்ட் அணியும் பழக்கமில்லாத சில பெண்கள் போனை வைப்பதற்கு இடம் இல்லாமல் அவர்களின் ப்ராவில் போனை வைத்துப் பயன்படுத்துகிறார்கள். செல்போன் கதிர்வீச்சு புற்றுநோயை ஏற்படுத்துகிறதா என்பது குறித்த தெளிவான விளக்கம் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால், சில விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, ப்ராவில் உள்ள போன் மார்பக புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கிறது என்று கூறியுள்ளனர்.

பேண்ட் அணியும் பழக்கமில்லாத சில பெண்கள் மற்றும் ஆண்கள் போன்களை இடுப்பு பகுதியில் சொருகி வைக்கிறார்கள், ஆராய்ச்சியின் முடிவுபடி, உங்கள் ஸ்மார்ட்போனை உங்கள் தொடையின் அருகே கொண்டு செல்வது இடுப்பு எலும்புகளை பலவீனப்படுத்துகிறது. இதனால் உங்களுக்கு இடுப்பு வலி, முதுகுத் தண்டு வலி ஆகிய வலிகள் ஏற்படுகிறது.

உங்கள் செல்போனை உங்கள் சருமத்துடன் ஒட்டும்படி வைத்து பயன்படுத்த வேண்டாம். மொபைல் திரையில் இருக்கும் பாக்டீரியா மற்றும் தூசிகள் உங்களின் முகத் தோலுக்கு மாற்றப்படுகிறது. இதனால் சரும கோளாறு ஏற்படவும் வாய்ப்புள்ளது. மேலும் மின்காந்த கதிர்வீச்சு இன்னும் நெருக்கமாகிறது. எப்பொழுதும் உங்கள் சாதனத்திற்கும் உங்கள் தோலுக்கு இடையில் குறைந்தது 0.5-1.5 செ.மீ. இடைவெளிவிட்டுப் பழகுங்கள்.

உங்கள் போனை சார்ஜ் செய்வது உங்கள் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்காது, ஆனால், உங்களுக்கு அருகில் வைத்து சார்ஜ் செய்வது தீங்கு விளைவிக்கக்கூடும். போன் உங்களுக்கு நெருக்கமாக இருந்தால் மின்காந்த கதிர்வீச்சு பாதிப்பு ஏற்படும். உங்கள் போனை இரவு முழுதும் சார்ஜிங்கில் வைக்காமல் இருப்பது நல்லது. இரவு முழுதும் சார்ஜ் செய்யும் பழக்கம், உங்கள் ஸ்மார்ட்போனின் பேட்டரி ஆயுளைக் குறைத்து பேட்டரியின் செயல்திறனைக் குறைக்கிறது.

வெளியில் குளிர்ச்சியாகவும், வெப்பநிலை பூஜ்ஜியத்திற்குக் குறைவாகவும் இருந்தால், உங்கள் போனை கூடுதல் கவனத்துடன் கவனித்துக் கொள்ளுங்கள். காரில் நீண்ட நேரம் அதை விட்டுவிடாதீர்கள். வெப்பநிலை வேறுபாடு கேஜெட்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். குளிர் இடத்திலிருந்து மீண்டும் ஒரு சூடான இடத்திற்கு உங்கள் போன் வரும்போது, நீர்த்துளிகள் உருவாக வாய்ப்புள்ளது. இது சிக்கலை உருவாக்கும். அடிக்கடி உங்கள் போனை பயன்படுத்துவதன் மூலம் இந்த சிக்கலிலிருந்து தப்பிக்கலாம்.

குளிர் இடங்களை போல, அதிக சூடான வெப்பநிலை இடங்களும் உங்கள் போனிற்கு தீங்கு விளைவிக்கும். வெப்பமான காலநிலையில், உங்கள் ஸ்மார்ட்போனை காரிலோ அல்லது கடற்கரையிலோ விட்டுவிடாதீர்கள். குறிப்பாக வீட்டில் சமையல் செய்யும் பெண்கள் போனை அடுப்புக்கு அருகில் மறந்து வைத்துவிடாமல் இருப்பது நல்லது.

ஈரமான இடங்களுக்கு மின் சாதனங்களைக் கொண்டு செல்வது என்பது மிகவும் ஆபத்தான செயலாகும். ஸ்மார்ட்போனை பாத்ரூமிற்கு எடுத்து செல்லும் நண்பர்களுக்கு இது நிச்சயம் கருத்தில்கொள்ள வேண்டிய விஷயமாக இருக்கிறது. குறிப்பாக பாத்ரூமில் சார்ஜ் செய்யும் பழக்கத்தை எப்பொழுதும் செய்யாதீர்கள். இது உங்களின் உயிருக்கே ஆபத்தாக முடிய வாய்ப்புள்ளது.

தலையணைக்கு அடியில் உங்கள் தலையணையின் கீழ் உங்கள் போனை வைக்க வேண்டாம். இதற்குப் பல காரணங்கள் உள்ளது, இரவில், நோட்டிபிகேஷன் வந்தால் அது உங்களின் உடலில் உள்ள மெலடோனின் உற்பத்தியைப் பாதிக்கிறது. இது உங்களுக்குத் தேவைப்படும் உறக்கத்தைக் கெடுக்கிறது. சரியான தூக்கம் மனிதனின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உங்கள் படுக்கையில் இருக்கும் போனிலிருந்து வெளிவரும் நீண்ட நேர மின்காந்த கதிர்வீச்சு தலைவலி மற்றும் தலைச்சுற்றலை ஏற்படுத்துகிறது.