Oktober 7, 2024

40 வயதான நடிகர் பிரேம்ஜி திருமணம் குறித்தி எடுத்த அதிரடி முடிவு..!!

40 வயதான நடிகர் பிரேம்ஜி திருமணம் குறித்தி எடுத்த அதிரடி முடிவு..!!

பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகனும், இயக்குனர் மற்றும் நடிகரான வெங்கட் பிரபுவின் சகோதரர் தான் நடிகர் பிரேம்ஜி. இவர் சிறந்த பாடகர். தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.

இந்நிலையில் 40 வயதாகியும் திருமணம் ஆகாத நிலையில் பிரேம்ஜிக்கு அவரது பெற்றோர்களும், நண்பர்களும் நீண்ட காலமாக மிகவும் தீவிரமாக பெண் தேடிவந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில், வீட்டில் எனக்கு திருமணமே வேண்டாம் என கூறிவிட்டேன். நான் நிம்மதியா, ஜாலியா இருக்க விரும்புகிறேன். நமக்கு எதுக்கு கல்யாணம், குழந்தை குட்டி எல்லாம். தனியாக இருப்பதுதான் மகிழ்ச்சி. மத்தவங்களுக்காக வாழ விரும்பவில்லை.

கல்யாணம் பண்ணிக்கொள்ள சொல்லி வீட்டில் எவ்வளவோ வற்புறுத்தினாங்க ஆனா, முடியவே முடியாதுனு சொல்லிட்டேன் என்று கூறியுள்ளார்.