லண்டனில் சிக்கியிருந்த 221 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்!

 

கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக இங்கிலாந்து லண்டன் நகரில் சிக்கியிருந்த 221 இலங்கையர்களுடன் விசேட விமானம் ஒன்று சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்தது.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 504 ரக விசேட விமானம் மூலம் குறித்த இலங்கையர்கள் தாயகம் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.