September 16, 2024

இராணுவ முகாம் அமைந்திருந்த பகுதியில் திடீரென வெடிப்புச் சம்பவம்

இராணுவ முகாம் அமைந்திருந்த பகுதியில் திடீரென வெடிப்புச் சம்பவம்

வவுனியா – செட்டிகுளம், வாழவைத்தகுளம் பகுதியில் இன்றய தினம் இடம்பெற்ற வெடி விபத்தில் இரு சிறுவர்கள் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

7 வருடங்களுக்கு முன்னர் குறித்த பகுதியில் இராணுவ முகாம் ஒன்று இருந்துள்ளது.

இந்த இடத்திற்கு அண்மையில் விளையாடிக் கொண்டிருந்த இரு சிறுவர்கள் மர்மப் பொருள் ஒன்றை எடுத்துச் சென்று சுற்றியல் ஒன்றினால் அடித்துள்ளனர்.

இதன்போது குறித்த பொருள் திடீர் என்று வெடித்துள்ளது.

இதனால் காயமடைந்த சிறுவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்ததுடன், மேலதிக சிகிச்சைகளுக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த நியாஸ் சனாஸ் வயது 12, முகமட் ராசித் வயது 16 ஆகிய சிறுவர்களே காயமடைந்துள்ளனர்.

விபத்து தொடர்பாக செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்,