இந்தியாவுடன் போரிடும் நோக்கில் ராணுவ விமான தளத்தை விரிவுபடுத்திய சீனா.!!

இந்தியாவுடன் போரிடும் நோக்கில் ராணுவ விமான தளத்தை விரிவுபடுத்திய சீனா.!!

இந்தியாவுடன் போரிடும் நோக்கில் எல்லையில் ராணுவ விமான தளத்தை சீனா விரிவுப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் அதிக தூரம் பறக்கும் விமானங்களுடன் இந்தியாவும் ஆயத்தமாகி வருகிறது.

எல்லையில் விமான தளத்தை சீனா விரிவுப்படுத்துவது தொடர்பாக 3 செயற்கைகோள் படங்கள் வெளியாகியுள்ளன.

இவை என்டிடிவி செய்தி நிறுவனத்திற்கு கிடைத்த படங்களாகும்.

அதில் பங்காங் ஏரியிலிருந்து 200 கி.மீ தொலைவில் சீனா தனது ராணுவ விமான தளத்தை விரிவுப்படுத்தி வருகிறது.

அந்த படங்கள் திபெத் நக்ரி குன்சா விமான நிலையம் என காட்டுகிறது. முதல் செயற்கைகோள் படம் ஏப்ரல் 6-ஆம் திகதியும் இன்னொரு படம் மே 21 ஆம் திகதியும் எடுக்கப்பட்டுள்ளது.

அதில் மே 21 -ஆம் திகதி எடுக்கப்பட்ட படத்தில் தான் சீன ராணுவ விமான தளத்தை தயார் செய்து வருகிறது. அதாவது ஹெலிகாப்டர்கள், போர் விமானங்களை நிலைநிறுத்துவதற்காக சீனா விமான தளத்தை விரிவுப்படுத்தி வருகிறது.

அது போல் மூன்றாவதாக எடுக்கப்பட்ட படத்தில் புதிதாக அமைத்த தளத்தில் 4 போர் விமானங்கள், ராணுவ தளவாடங்கள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.

அவை ஜே 11 அல்லது ஜே 16 ரக விமானங்கள் என தெரிகிறது. இவை இரண்டுமே நவீன விமானங்களாகும். இந்திய விமான படையின் சுகோய் 30 ரக விமானங்களின் திறன்களை ஒத்தது இந்த சீன விமானங்கள்.

இவை ரஷ்யாவின் சுகோய் 27 விமானங்களை போல் சீன நாட்டிலேயே தயார் செய்யப்பட்டவையாகும். மிகவும் போர் திறன் கொண்ட விமானங்களாகும்.

இதை எதிர்க்க இந்தியாவும் தயார் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.