இராணுவ தளம் மீது சரமாரி ஏவுகணை தாக்குதல்..!

இராணுவ தளம் மீது சரமாரி ஏவுகணை தாக்குதல்..!

ஏமனில் உள்ள ஹவுத்தி போராளிகள் செவ்வாய்க்கிழமை தலைநகர் சனாவின் வடகிழக்கில் மரிப் மாகாணத்தில் உள்ள சவுதி ஆதரவு அரசாங்கத்தின் இராணுவத் தளத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் தலைமைத் தளபதியின் உறவினர்கள் உட்பட 7 பேர் கொல்லப்பட்டதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

ஈரானுடடை ஆதரவுப்பெற்ற ஹவுத்தி போராளிகளை எதிர்த்துப் போராடும் சவுதி தலைமையிலான கூட்டணி, கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏப்ரல் 24 ம் தேதி அன்று ஒரு மாத போர் நிறுத்த ஒப்பந்தத்தை அறிவித்தது.

ஒரு மாதம் முடிவடைந்த நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும், தற்போது ஹவுத்தி இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை.

செவ்வாயன்று நடந்த தாக்குதலில் தலைமைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சாகீர் பின் அஜீஸ் உயிர் தப்பியதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

அவரது மகன்களில் ஒருவர் மற்றும் ஒரு மருமகன் என இரண்டு அதிகாரிகளும், மேலும் 5 பேரும் கொல்லப்பட்டனர் என்று இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன. அவரது மற்றொரு மகன் இதை ட்விட்டரில் உறுதிப்படுத்தினார்.

தெற்கில் உள்ள சவுதி ஆதரவு அரசாங்கத்திற்கும், வடக்கை தளமாகக் கொண்ட ஹவுத்தி இயக்கத்திற்கும் இடையே ஏமன்பிளவுபட்டுள்ளது.

ஹவுத்தி குழு 2014 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தலைநகரான சனாவில் அதிகாரத்திலிருந்து அரசாங்கத்தை வெளியேற்றியதிலிருந்து, சில மாதங்களுக்குப் பிறகு ஏமன் உள்நாட்டு விவகாரத்தில் சவுதி தலைமையிலான கூட்டணி தலையிட வழிவகுத்தது.