September 9, 2024

நீங்காத நினைவுகள்! -இந்துமகேஷ் MUKONA (1992 – 1999)

1992 ஆனி 5,6,12,19ம் திகதிகளில் பிறேமன் நகரின் பல பாகங்களிலுள்ள அரங்குகளில் அரங்கேற்றப்பட்டு ஆயிரக்கணக்கான இரசிகர்களைக் கவர்ந்திருக்கிறது „MUKONA“
ரெனேவர் கலாச்சார நிலையத்தில் ( Kultur Büro- Tenever) பணியாற்றிவரும் திரு. சின்னையா மகேஸ்வரனின் சிந்தனையில் உருவான இந்நாடகம்
Kindertagesheimen, Kinderhorten, Kulturläden ஆகிய இடங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்ட
120 சிறுவர் சிறுமியர் பங்குகொள்ள அருமையான இசையுடன் அரங்கேறிற்று.
மனித வாழ்வின் ஆரம்பம் இயற்கையோடு இணைந்த மனிதவாழ்வு, நாகரீக முதிர்ச்சியின் பயனாக மனிதரிடையே தோன்றிய வர்க்கமுரண்பாடுகள் அவற்றின் விளைவான தன்னாதிக்க உணர்வு, ஒருசமூகம் மற்றைய சமூகத்தை அடிமைகொள்ள முயலுதல், அதன்விளைவான போராட்டங்கள் மனிதரை மனிதரே அழிக்க இயற்கையின்
வடிவங்களான நீர், நிலம், காற்று, நெருப்பு இவைகளும் மனித இனத்துக்கு எதிராகக் கிளர்ந்தெழுதல் இவைகளை வெளிப்படுத்தும் விதமாக நிலம், நீர், காற்று, நெருப்பு என்பவற்றைப் பிரதிபலிக்கும்வண்ணம் அவற்றின் நிறங்களில்
உடுப்புக்களை அணிந்து, இயற்கையின் அமைதியையும் அவற்றின் கொந்தளிப்பையும் தமது அங்க அசைவுகளுடன் பிள்ளைகள் இசைக்கேற்ப வெளிப்படுத்திய விதம் பார்வையாளர்களை பரவசப்படுத்திற்று.
மனிதர்களுக்கிடையே உருவான பிரிவுகளை வெளிப்படுத்தும் விதமாக மனித வரலாற்றின் முதல்மனிதர்களைச் சித்தரிக்க இலைகுழை உடைகளை ஒத்த நிறங்களினாலான உடைகளில் சிறுவர்கள் தோன்றினார்கள்.
நாகரீகம் அடைந்த அதேசமயம் தன்னாதிக்க உணர்வுடைய புதிய மனிதர்களைச் சித்தரிக்க அவர்கள் பெரிய காதுகள், பெரிய மூக்குகள், பெரிய கண்கள் பெரிய வாய்கள், பெரிய பாதங்கள் என்பனவற்றைக் கொண்டவர்களாகப் பிரிக்கப்பட்டிருந்தார்கள்.
„மனிதநேயத்தோடு வாழ முயலும் மனிதர்களால் மட்டுமே இந்த உலகம் அமைதிபெறும்
இயற்கையும் மனிதனை நேசிக்கும்!“ என்கின்ற தத்துவத்தை அழகாக வெளிப்படுத்துகிறது இந்நாடகம்.
பலத்த ஆரவாரமான கைத்தட்டல்களை இந்நாடகத்தில் பங்குகொண்ட
பிள்ளைகள் அனைவரும் பெற்றுக்கொண்டார்கள்.
( 1992 ல் வெளியான ஜேர்மன் பத்திரிகைச் செய்தியிலிருந்து….)
0:20 / 1:05:15
Kajaliny Ranjithkumar, Babu Nagesu and 2 others
2 Comments
Like
Comment

Share