März 29, 2024

துயர் பகிர்தல் நாகலிங்கம் சின்னராஜா

யாழ். சரவனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சின்னராஜா அவர்களின் கண்ணீர் அஞ்சலி.

சிற்பியின் முத்துப் போல்
கூடிப் பிறந்த என் அண்ணா!!!!
பாசமும் நேசமும் காட்டி
பரிவுடன் எனைச் சீராட்டி
தந்தையின் ஸ்தானத்தில்
கடமைதனைச் செய்து
அன்பிற்கு இலக்கணம்
இதுவென்று உணர்த்தி
பாசத்தை பொழிந்த
என் அண்ணாவின்
மறைவிற்கு எம் ஆழ்ந்த துயரத்தை பகிர்கின்றோம்…

மாண்டார் மீண்டதில்லை
இருந்தும் மனம் வேதனையில் 
துடிக்கின்றது
உங்கள் ஆத்மா சாந்திபெற இறைவனை வேண்டுகின்றோம்..

தகவல்: சகோதரி

தொடர்புகளுக்கு

சுந்தரமூர்த்தி நாகேஸ்வரி(கிளி) – சகோதரி