September 23, 2023

மீண்டும் இலங்கை முழுவதும் ஊரடங்கு!

முஸ்லீம்களது பெருநாளான எதிர்வரும் திங்கட்கிழமை ஊரடங்கு அமுலில் இருக்குமென இலங்கை அரசு அறிவிப்புவிடுத்துள்ளது.
அதேவேளை கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவிப்பு வரை ஊரடங்கு தொடரும் என அறிவித்துள்ள  ஜனாதிபதி ஊடகப்பிரிவு நாடுமுழுவதும் 24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, 25 ஆம் திகதி திங்கட்கிழமை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் தற்போது அறிவித்துள்ளது.
வெசாக்,புத்தாண்டு மற்றும் பெருநாள் ஆகிய தினங்களில் மக்கள் வெளியில் ஒன்று திரள்வதை தடுக்கவே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.