April 19, 2024

கொரோனாவால் நாசாவின் புதிய கண்டுபிடிப்பு

கொரோனாவால் நாசாவின் புதிய கண்டுபிடிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மனிதர்களின் அன்றாட செயல்பாடுகளில் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவாக புதைபடிவ எரிபொருள் உமிழ்வு பெருமளவு குறைந்துள்ளதை நாசா செயற்கைக்கோள்கள் தொடர்ந்து காண்பித்து வருகின்றன.

புதைபடிவ எரிபொருள்கள் போன்ற மாசுபடுத்திகளின் விளைவுகளை நாசா விண்வெளியில் இருந்து காணலாம்.

நமது கிரகத்தின் மேற்பரப்பில் அமைந்துள்ள பூமி-சுற்றுப்பாதை செயற்கைக்கோள்கள், கணினி அடிப்படையிலான மாதிரிகள், தரவுத்தொகுப்புகள் மற்றும் சென்சார்கள் ஆகியவற்றை இந்நிறுவனம் கொண்டுள்ளது.

இது சுற்றுச்சூழலை தொடர்ந்து கண்காணிப்பதுடன், விஞ்ஞானிகள் இந்த தொற்றுநோயின் வளர்ந்து வரும் விளைவுகளை அவதானிக்க அனுமதிக்கிறது.

வளிமண்டலத்தில் புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதில் பெரும்பாலும் தொடர்புடைய நைட்ரஜன் டை ஆக்சைடு என்ற காற்று மாசுபாட்டைக் காட்டும் வரைபடங்களையும் புகைப்படங்களையும் உருவாக்குகின்றனர்.

இந்த தொற்றுநோயின் தொடக்க நாட்களில் இருந்து, செயற்கைக்கோள்கள் நைட்ரஜன் டை ஆக்சைடு அளவுகளில் ஏற்படும் மாற்றங்களைக் காட்டுகின்றன. இதுவரை இத்தாலி, சீனா உள்ளிட்ட நாடுகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் காணப்படுகின்றன.

இது தொடர்பான பல தரவுகளை நாசா விண்வெளி மையம் வெளியிட்டுள்ளது.