April 19, 2024

திங்கள் முதல் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டியவை! – சுவிஸ்

 

கிட்டத்தட்ட இரு மாதங்களாக மூடப்பட்டிருந்த அனைத்து கட்டாயப்பாடசாலைகளும் சுவிற்சர்லாந்தில் வருகின்ற திங்கள் (11.05.20) தொடக்கம் மீண்டும் திறக்கப்படுகின்றன. மீண்டும் திறக்கப்படும் நாளில் இருந்து மாணவர்கள் பாடசாலைகளில் கடைப்பிடிக்கப்பட வேண்டியவற்றை சுவிஸ் கூட்டாட்சி வெளியிட்டுள்ளது.

இன்னும் கொறோனா முடிவிற்கு வராத பட்சத்தில் மாணவர்கள் அனைவரும் ஆசிரியர்களின் வேண்டுகோள்களிற்கமைய அவதானமாக நடந்து கொள்வது ஒரு கட்டாயத்தேவை ஆகும்.

வெளியே போய் வந்த பின், கழிப்பறைக்குச் சென்ற பின், உணவு உண்ணும் முன், தும்மிய அல்லது இருமிய பின் கைகளை சவுக்காரம் போட்டு மாணவர்கள் கைகளை கழுவ வேண்டும்.

சக மாணவர்களோடு இடைவேளையில் உணவுகளை பரிமாறுவதை தவிர்க்க வேண்டும்.

அருகில் செல்வதையும், கைகளை குலுக்குவதையும், அணைத்துக்கொள்வதையும் தவிர்த்துக்கொண்டு தூரத்தில் இருந்து கை காட்டலாம்.

ஆசிரியர்களும் மாணவர்களும் அருகே செல்லாது, இடைவெளியைப்பேண வேண்டும்.

இருமல் மற்றும் தும்மல் ஏற்படும் போது கைக்குட்டைக்குள் அல்லது முழங்கை மடிப்பிற்குள் தும்முதல் அல்லது இருமுதல் வேண்டும்.

மாணவர்கள் அனைவரும் ஆசிரியர்களோடு சேர்ந்து செயற்பட்டால் பலமாக இருக்க முடியும்.

மொழிபெயர்ப்பு: நிதுர்ஷனா ரவீந்திரன்