April 19, 2024

கொரோனாவிடம் இருந்து தமிழ் மக்களை பாதுகாப்போம்! சவேந்திர சில்வா…

இலங்கையிலுள்ள எந்தவொரு தமிழ் மக்களுக்கும் கொரோனா தொற்றினால் பாதிப்பு ஏற்படுவதற்கு தாம் இடமளிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஒழிப்பு செயலணியின் தலைவரும், இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

பிபிசி தமிழ் செய்தி சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“குறிப்பாக யாழ்ப்பாணத்தை எடுத்துக்கொண்டால், சமய நிகழ்வொன்றில் பங்கேற்ற சிலர் அடையாளம் காணப்பட்ட. அவர்கள் கண்காணிப்பு நிலையங்களுக்கு உட்படுத்தப்பட்டு முப்படையினர் மிகவும் கவனமாக பார்த்துக்கொண்டனர்.

தமிழர் அதிகளவில் வாழும் பகுதிகளில் சமூகத்திற்குள் இருந்து ஒரு கொரோனா தொற்றாளரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

அவ்வாறு முப்படையினர் தமிழர்களை மிகவும் கவனமாக பார்த்துக்கொண்டுள்ளனர். இரண்டு மாதம் என்ற மிகக் குறுகிய காலப் பகுதிக்குள் கோவிட் தொற்றை இலங்கையில் கட்டுப்படுத்தியுள்ளதாக அவர் கூறுகின்றார்.

எதிர்வரும் நாட்களில் நாட்டு மக்கள் ஒழுக்கத்துடனும், சமூக இடைவெளியை பேணியும், சுகாதார பிரிவின் ஆலோசனைகளை பின்பற்றியும் நடந்துக்கொண்டால் கோவிட் தொற்றை நாட்டிலிருந்து முழுமையாக இல்லாதொழிக்க முடியும்.

இதேவேளை, வெளிநாடுகளிலிருந்து முதற்கட்டமாக மாணவர்களே அழைத்து வரப்படுவதாகவும், அவர்களை தொடர்ந்தே ஏனையோரை அழைத்து வர அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு அழைத்து வரப்பட்ட 5532 பேர், 41 கண்காணிப்பு நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டு தற்போது கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.