März 29, 2024

நாளை வடகொரிய அதிபருடன் பேசவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு!

வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-உன் உள்ளிட்ட தலைவர்களுடன் நாளையதினம் தாம் பேசவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வொஷிங்ரனில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், நாளை கேம்ப் டேவிட் ஓய்வு இல்லத்துக்குச் செல்லவிருப்பதாக கூறினார்.

அத்துடன், அப்போது கிம் ஜொங் உன் உட்பட உலகின் பல்வேறு நாட்டுத் தலைவர்களுடன் தொலைபேசியில் பேசவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன் உடல்நலக்குறைவால் பாதிப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் கிம் ஜொங் உன் நலமுடன் இருப்பதாகத் தென்கொரியா தெரிவித்திருந்த நிலையில், தொழிலாளர் நாளில் புதிய உரத்தொழிற்சாலையை அவர் திறந்து வைத்த ஒளிப்படம் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் கிம், இருபது நாட்களுக்குப் பிறகு பொதுவெளியில் தோன்றி தன்மீதான தொடர் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதனையடுத்து , கிம் ஜொங் உன் பொது வெளியில் தோன்றியுள்ளதால் அவருடன் பேசவுள்ளதாக ட்ரம்ப் கூறியுள்ளார்.