April 23, 2024

234,112 பேரை கொன்று குவித்தது கொரோனா

சீனாவின் – வுஹான் நகரில் இருந்து பரவிய கொரோனா (கொவிட்-19) வைரஸ் இப்போது அமெரிக்கா, இத்தாலி, பிரித்தானியா மற்றும் ஸ்பைன் எங்கும் உச்சம் தொட்டு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றது.

இந்த வைரஸ் தொற்று காரணமாக இன்று (01) காலை வரை 212 நாடுகள், பிராந்தியங்கள் மற்றும் இரு கப்பல்கள் அடங்கலாக (இளவரசி மற்றும் எம்எஸ் ஷான்டம் கப்பல்) உலக நாடுகளில் 3,308,323 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அவர்களில் 234,112 பேர் உயிரிழந்துள்ளதுடன், 1,042,874 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துடன் இப்போது வரை 2,031,337 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன்  (Active Case) சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன்படி மொத்தமாக அதிக உயிரிழப்புக்களை சந்தித்த நாடுகளாக,

– அமெரிக்கா > 63,861
– இத்தாலி > 27,967
– பிரித்தானியா > 26,771
– ஸ்பெயின் > 24,543
– பிரான்ஸ் > 24,376
– பெல்ஜியம் > 7,594
– ஜேர்மன் > 6,623
– ஈரான் > 6,028
– பிரேஷில் > 6,006

காணப்படுகின்றன.