März 29, 2024

கொரோனா அச்சுறுத்தல் விலகியது: சாதாரண நிலைக்கு திரும்பும் முதல் ஐரோப்பிய நாடு

உலகின் எந்த நாடுகளையும் விட்டுவைக்காமல் கொரோனா கடுமையாகப் பாதித்துள்ளது. இந்தியாவும் அதற்குத் தப்பவில்லை. அத்தியாவசிய தேவைகளைத் தவிர, மற்ற அனைத்துத் துறைகளும் முடங்கியுள்ளன. சமகால உலக வரலாற்றில் இதுபோன்றதொரு தீவிரமான பாதிப்பை உலகம் எதிர்கொண்டதில்லை. உலக வல்லரசு என மார்தட்டிக்கொள்ளும் அமெரிக்காவையும் அசைத்துப்பார்த்துவிட்டது கொரோனா.

கொரோனாவால் நிகழ்காலத்தில் ஏற்படுகிற உயிரிழப்புகளையும் தாண்டி, நீண்டகால அளவில் உலகப் பொருளாதாரத்திலும் கொரோனாவின் தாக்கம் எதிரொலிக்கும். ஏழை, நடுத்தர உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த மக்கள், இதனால் கடுமையாகப் பாதிக்கப்படுவர். இதனால் உலக நாடுகள் இடைக்கால பொருளாதார நிவாரணங்களை அறிவித்துவருகின்றன.

இந்திய அரசும் ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடி மதிப்பிலான பொருளாதார நிவாரணங்களை வழங்க இருப்பதாக அறிவித்தது. உலக நாடுகள், தங்களுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10% இடைக்கால நிவாரணங்களுக்காகப் பயன்படுத்த முன் வந்துள்ளன. இந்திய அரசு மேலும் செலவுசெய்ய வேண்டும் என்கிற குரல்களும் எழுப்பப்பட்டுவருகின்றன.

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், உலகின் தலைசிறந்த பொருளாதார வல்லுநர்களில் ஒருவர். தற்போது, சிகாகோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். இந்தியாவில் நிலவும் பொருளாதார நிலைமையைப் பற்றி மிகத் துல்லியமான விமர்சனங்கள் வைப்பதில் முதன்மையானவராக இருந்துவருகிறார் ரகுராம் ராஜன். கொரோனா நெருக்கடியில் இந்தியா என்ன செய்ய வேண்டும் என்பதையும் சமீபத்தில் தெரிவித்திருக்கிறார்.

அவர், ”இந்திய விடுதலைக்குப் பிறகு நம் நாடு சந்திருத்திருக்கும் மிகப்பெரிய நெருக்கடி இது. இந்திய அரசு இந்த நெருக்கடிகளை எதிர்கொள்ள, எதிர்க்கட்சிகள் உட்பட அனைத்து தரப்பிலிருந்தும் திறமையானவர்களை அழைத்து, இணைந்து பணியாற்ற வேண்டும். பிரதமர் அலுவலகத்திலிருந்து மட்டுமே அனைத்து பணிகளையும் செய்துவிட முடியாது. அது உதவிகரமாகவும் இருக்காது. கட்சிகளைக் கடந்து இந்தியா முழுவதும் நிறைய திறமையானவர்கள் இருக்கிறார்கள். அரசாங்கம் அவர்களுடைய திறமையைப் பயன்படுத்தி, அவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும்”

„2008 – 09 காலகட்டத்தில் ஏற்பட்ட நெருக்கடியிலும்கூட இந்தியா அவ்வளவாகப் பாதிக்கப்படவில்லை. வளர்ச்சி, வேலைவாய்ப்பில் எந்த சிக்கலும் எழவில்லை. நம்முடைய பொருளாதார கட்டமைப்புகளும் அப்போது வலுவாக இருந்தது. ஆனால் தற்போது, இதுபோன்ற சாதகமான சூழ்நிலைகள் எதுவுமில்லை. ஏற்கெனவே, பொருளாதாரப் பின்னடைவைச் சந்தித்துள்ளது. ஆனால், இந்தியா தன்னிடம் உள்ள நிதி ஆதாரங்களை உரிய முறையில் முன்னுரிமை அளித்து பயன்படுத்தினாலே இந்த சிக்கலில் இருந்து மீண்டு வந்துவிடலாம். தற்போதைய முன்னுரிமை, கொரோனா தாக்கத்திலிருந்து வெளி வர வேண்டும் என்பதே. நீண்ட கால நடவடிக்கைகளைவிடவும் குறுகிய காலத்தில் செய்யவேண்டியவற்றை நாம் யோசிக்க வேண்டும். பரிசோதனையை அதிகரித்து, சமூக விலகலை மிகத் தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும். 21 நாள்கள் ஊரடங்கு என்பது முதல்படி. இந்தியா தன்னை தயார் நிலையில் வைத்திருக்கவேண்டியது அவசியம். நாம் இன்னமும் வேகமாகச் செயல்பட வேண்டும்.

இந்த குறிப்பிட்ட ஊரடங்கு காலத்திற்குள்ளாக வைரஸின் தாக்கம் குறையவில்லையென்றால், அடுத்து செய்யவேண்டியதைப் பற்றியும் இந்திய அரசு யோசிக்க வேண்டும். இந்தியா போன்ற நாட்டை நீண்ட காலம் தொடர்ந்து முடக்கிவைத்திருக்க முடியாது. எனவே, ஊரடங்கிலிருந்து மெல்ல தொழில்களைத் தொடங்குவது பற்றியும் யோசிக்க வேண்டும். இந்த இடைப்பட்ட காலத்தில், வருமானம் இழந்த பிரிவினரையும் அரசு கவனித்துக்கொள்ள வேண்டும். எல்லோருக்கும் நேரடியாக பணப் பரிமாற்றத்தை மேற்கொள்ள முடியாது. மேலும், அரசு அறிவித்திருக்கக்கூடிய நிவாரணமும் போதுமானதாக இருக்காது. இந்தியாவின் வளர்ச்சி விகிதமும் அடுத்து வரக்கூடிய காலகட்டங்களில் குறையும் என கணிக்கப்பட்டுள்ளன. அதை எதிர்கொள்ளவும் இந்திய அரசு தயாராக வேண்டும்“

”அரசின் ஆதாரங்கள் கட்டுப்பட்டுள்ள போதிலும் ஏழை மக்களின் மீது அவற்றை செலவு செய்ய வேண்டும். மத்திய – மாநில அரசுகள் இணைந்து செயலாற்றவேண்டிய நேரம் இது. தெளிவான திட்டமிடல் இல்லாமல் ஊரடங்கு தொடருமேயானால், மக்களிடம் சரியான ஒத்துழைப்பு இருக்காது. நெருக்கடியின்போதுதான் இந்தியா மாற்றங்களுக்குத் தயாராகும் என்று சொல்லப்படுவதுண்டு. இனியாவது நாம் செய்யவேண்டிய பொருளாதார, சுகாதாரத்துறை சீர்திருத்தங்களைப் பற்றி யோசிக்க வேண்டும்” என்றுள்ளார்.