März 29, 2024

சுவிஸில் வீடுகளில் தனிப்பட்ட விழாக்களை தவிர்க்கவும்! – காவல்துறை!

கொறோனா நேரமும் சுவிஸில் விழாக்களை கொண்டாடும் ஆர்வத்துடனே சிலர் இருக்கின்றனர். அதனால் வீடுகளில் தனிப்பட்ட விழாக்களை நடாத்துகின்றனர். காவல்துறை இதற்கு தண்டம் அறவிடுகின்றது மற்றும் எச்சரிக்கை விடுக்கின்றது.

அனைத்து உணவகங்களும், மதுச்சாலைகளும் மூடப்பட்டதால் சுவிஸில் மக்கள் பல்கொனிகளிலும், வீடுகளிலும், தோட்டங்களிலும் தனிப்பட்ட விழாக்களை கொண்டாடுகின்றனர். “வெளியே செல்வதற்குத் தடை என்பதால் விடுகளில் இவ்வாறு கொண்டாடுவது எனக்கு மிகவும் பிடித்துள்ளது.” என 20min செய்தித்தளத்திற்கு ஒருவர் கூறியுள்ளார்.

பேர்ன் மாநில காவல்துறைக்கு வீடுகளில் நடாத்தப்படும் விழாக்களை பற்றி பலர் புகார் செய்துள்ளனர். ஆனால் பேர்ன் மாநிலத்தில் எந்த விழாக்களையும் நிறுத்த வேண்டிய நிலமை வரவில்லை, ஏனெனில் மக்கள் கூட்டாட்சியின் நடைமுறைகளை ஏற்று நடந்து கொண்டனர். என காகல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு மாறாக செங்.கால்லன் மாநிலத்தில் ஒரு இளம்பெண் தனது பிறந்தநாள் விழாவை ஏழு நண்பர்களுடன் கொண்டாடியதால் காவல்துறையால் கண்காணிப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சூரிச் மாநிலத்தில் பூலாக்கில் பலருடன் கொண்டாடப்பட்ட விழா ஒன்றில் காவல்துறை பலரிடம் தண்டம் அறவிட்டது.

“பொதுவாக மக்கள் நாளிற்கு நாள் கூட்டாட்சியின் நடவடிக்கைகளை சாதாரணமாக எடுக்கின்றனர். அனைவரும் இந்நேரத்தில் சுயமாக எண்ணி நடந்து கொள்வதே சிறந்தது. தங்களிற்கு கொறோனா வைரஸ் தொற்றாது என்ற எண்ணத்துடன் பலர் இவ்வாறான விழாக்களை நடாத்துகின்றனர். இதேவேளை அவர்கள் சுவிஸ் கூட்டாட்சியின் ஒழுங்குமுறைகளை கடைப்பிடிக்க முடியாது என நினைப்பது தவறு என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.” எனவும் சுவிஸ் காவல்துறை தகவல் தொடர்பு பொறுப்பாளர் கான்ஸ் பீற்றர் கிறூசி கூறியுள்ளார்.