August 8, 2022

Tag: 19. März 2020

துயர் பகிர்தல் திரு பாலசிங்கம் சிங்கராசா

திரு பாலசிங்கம் சிங்கராசா தோற்றம்: 26 ஜூலை 1967 - மறைவு: 18 மார்ச் 2020 யாழ். வடமராட்சி மயிலியதனையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Dandenong North ஐ...

லண்டனில் 40 அண்டர்கிரவுண்ட் ரயில் நிலையங்கள் இன்று முதல் மூடப்படும்

கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்துள்ளதால், லண்டனில் மக்கள் நடமாட்டத்தைக் குறைக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக லண்டன் நகரில் அண்டர்கிரவுண்ட் ரயில் நெட்வொர்க்கின் 40 ரயில் நிலையங்கள் இன்று மூடப்படுகின்றன. இரவு சேவைகள் இருக்காது, பஸ் சேவைகளும் குறைக்கப்படும் என்றும்  டி.எஃப்.எல் தெரிவித்துள்ளது. லண்டன் ஓவர் கிரவுண்ட், டி.எஃப்.எல் ரயில், டி.எல்.ஆர் மற்றும் தெற்கு லண்டனில் உள்ள டிராம் நெட்வொர்க் ஆகியவை இதில் அடங்கும். ஏற்கனவே, வியாழக்கிழமை அன்று, ரயில் சேவையை ஓரளவு நிறுத்துவதாக லண்டன் போக்குவரத்து (டி.எஃப்.எல்) அறிவித்தது. இதைத் தொடர்ந்து லண்டன் அண்டர்கிரவுண்டு நெட்வொர்க்கில் பயணிகள் பயணிப்பது ஓரளவுக்கு குறைந்தது. வெள்ளிக்கிழமை முதல், வாட்டர்லூ மற்றும் சிட்டி லைன் முழுவதுமாக மூடப்படும். திங்கள்கிழமை முதல் டிஎஃப்எல் தனது நெட்வொர்க்கின் மற்ற ரயில் சேவைகளை படிப்படியாகக் குறைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மூடுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள வழித்தடங்கள்: பேக்கர்லூ லைன்: லம்பேத் நோர்த், ரீஜண்ட்ஸ் பார்க், வார்விக் அவென்யூ, கில்பர்ன் பார்க், சேரிங் கிராஸ் சென்ட்ரல் லைன்: ஹாலண்ட் பார்க், குயின்ஸ்வே, லான்காஸ்டர் கேட், சான்சரி லேன் மற்றும் ரெட் பிரிட்ஜ் சேவைகள். சர்க்கிள் லைன்: பேஸ்வாட்டர், கிரேட் போர்ட்லேண்ட் ஸ்ட்ரீட் மற்றும் பார்பிகன் டிஸ்ட்ரிட் லைன்: போ சாலை, ஸ்டெப்னி கிரீன், மேன்ஷன் ஹவுஸ், டெம்பிள், செயின்ட் ஜேம்ஸ் பார்க் மற்றும் க்ளோசெஸ்டர் சாலை. ஜூபிலி லைன்: சுவிஸ் காட்டேஜ், செயின்ட் ஜான்ஸ் வூட், பெர்மாண்ட்சே, மற்றும் சவுத்வாக். நார்தர்ன் லைன்: டஃப்னெல் பார்க், சாக் பார்ம், மார்னிங்டன் க்ரசென்ட், கூட்ஜ் தெரு, போரோ, கிளாஃபம் சவுத், டூட்டிங் பெக், சவுத் விம்பிள்டன், மற்றும் ஹாம்ப்ஸ்டெட். பிக்காடில்லி லைன்: கலிடோனியன் சாலை, அர்செனல், கோவன்ட் கார்டன், ஹைட் பார்க் கார்னர், பவுண்ட்ஸ் கிரீன், மற்றும் மேனர் ஹவுஸ் விக்டோரியா லைன்: பிம்லிகோ, பிளாக்ஹார்ஸ் சாலை இந்த ரயில் நிலையங்கள் மூடப்படுவது தொடர்பான தகவல்களை தங்களது அதிகாரபூர்வமான வலைத்தளத்தில் பார்த்துக்கொள்ளுமாறு அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. இங்கிலாந்தின் பிற பகுதிகளை விட லண்டனில் இந்த வைரஸ் வேகமாக பரவுகிறது என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதைத் தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் என்றும் பார்கள், விடுதிகள் மற்றும் உணவகங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் பிரதமர் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளார்.

பிரான்சில் ஆலயங்கள் மூடப்படுகின்றன, மருத்துவ மனைகள் திறக்கப்படுகின்றன!

  பாரிஸ் நகரில் நம்மவர்களால் white church என்று பொதுவாக அழைக்கப்படும் பிரபல திரு இருதய தேவாலயம் (Basilica of the Sacred Heart) மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது....

இலங்கையில் 52 ஆவது கொரோனா தொற்றாளர் இனங்காணப்பட்டதாக தகவல்!

இலங்கையில், கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தவகையில் இன்று புதிததாக இருவர் கொரோனா பாதிக்கபட்டதாக இனங்காணப்பட்டுள்ளனர். இதேவேளை, தற்போது மொத்தமாக 15...

2,600 மருத்துவர்களுக்கு கொரோனா: இத்தாலியில் மேலதிக ராணுவம் குவிப்பு தொடரும் தொற்று

இத்தாலியில் சுமார் 2,600 மருத்துவ சேவை பிரிவினருக்கு( மருத்துவர்கள், தாதிகள், ஏனையோர்) கொரோனா பரவியுள்ளது. இதனால் கொரோனா பரவியுள்ள சாதாரன மனிதர்களுக்கு மருத்துவம் செய்ய மருத்துவர்கள் பற்றாக்குறை...

அமுல்படுத்தப்பட்டது பொலிஸ் ஊரடங்குச் சட்டம்..!!

புத்தளம், , சிலாபம் மற்றும் நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்கு உத்தரவு இன்று (19) காலை 8.00 மணிக்கு நீக்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம்...

இலங்கையில் திடீரென அதிகரித்துள்ள ஈக்கள்! பொது மக்களுக்கு எ ச்சரி க்கை

  இலங்கையில் திடீரென அதிகரித்துள்ள ஈக்கள்! பொது மக்களுக்கு எ ச்சரி க்கைநாடு முழுவதும் ஏற்பட்டுள்ள வெ ப்பமான வா னிலையா ல் ஈக்களின் பெ ருக்கம்...

யாழில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தால் இத்தாலியைப் போன்று பலரைக் காப்பாற்ற முடியாமல் போகும்..!! மருத்துவ அதிகாாிகள் எச்சாிக்கை…!

யாழ்.மாவட்டத்தில் கொரொனா வைரஸ் பரவாது என்பதுபோல் யாழ்.மாவட்ட மக்கள் செயற்படு கிறாா்கள். திருவிழாக்கள், கோவில்கள், தேவாலயங்கள், பொது இடங்களில் சுதந்திரமாக நடமா டுகிறாா்கள் அது மிக ஆபத்தான...

நாங்கள் செய்த தவறை நீங்களும் செய்து விடாதீர்கள்! இத்தாலியிலிருந்து ஒரு தாயின் அழுகுரல்…!

உலகை அச்சுறுத்தி ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் பல உயிர்களை பலிவாங்கி வருகின்றது.சீனாவில் தொடங்கிய இந்த வைரஸின் கோரத்தாண்டவம் அதிகமான பலி எண்ணிக்கை முதலில் சீனாவிலும், தற்போது...

கனடா-அமெரிக்கா எல்லை மூடல் வெள்ளிக்கிழமை இரவு முதல் நடைமுறைக்கு வரும் – பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ!!

இன்று வியாழக்கிழமை காலை 11 மணியளவில் COVID-19 தொடர்பாக பிரதமர் இல்லத்துக்கு வெளியில் ஊடகங்களுக்கு பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ கருத்துத் தெரிவிக்கையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக...

யாழ்ப்பாணத்தில்… கூட்டமைப்பு வேட்புமனு தாக்கல்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் இன்று காலை வேட்புமனு தாக்கல் செய்துள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக முதன்மை வேட்பாளரான இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை...

இத்தாலியை போல் மாறும் ஆபத்தில் யாழ்ப்பாணம்! வெளியாகிய அதிர்ச்சி எச்சரிக்கை

யாழ்.மாவட்டத்தில் கொரொனா வைரஸ் பரவாது என்பதுபோல் யாழ்ப்பாண மக்கள் செயற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. திருவிழாக்கள், கோவில்கள், தேவாலயங்கள், பொது இடங்களில் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் அது மிக ஆபத்தான விளைவுகளை...

சமூக நலனை பாதுகாக்க புதிய “கொரோனா சட்டம்”

வைரஸ் பாதிப்பினால் ஏற்படும் புதிய நிலைமைகளை சமாளிக்க நோர்வே அரசாங்கம் தற்காலிக “கொரோனா சட்டம்” ஒன்றை இயற்றியுள்ளது இன்று புதன்கிழமை அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்படும் இந்த தற்காலிக...

யாழ்ப்பாணத்தில் 3 மணியுடன் இனி கடைகள் பூட்டு – வர்த்தக சங்கம் அறிவிப்பு.

  வடமாகாண ஆளுநர் அறிவுறுத்தலுக்கமைய இன்று வியாழக்கிழமை நடைபெற்ற யாழ் வணிகர் சங்கத்தின் நிர்வாகசபைக் கூட்டத்தில் கொரோனா வைரஸின் தாக்கத்தினால் ஏற்பட்டிருக்கும் அவசர நிலையைக் கருத்தில் கொண்டு...

யாழில் இராணுவத்தினர் வெறியாட்டம் – கர்ப்பிணி உட்பட பெண்கள் மீது கொடூர தாக்குதல்!

யாழ்.நகா்கோவில் கிழக்கு பகுதியில் இராணுவத்தினா் இளைஞன் ஒருவனை கைது செய்ய முயற்சித்தபோது அவா் தப்பி சென் ற நிலையில் பொதுமக்கள் மீது குறிப்பாக பெண்கள், சிறுவா்கள் மீது...