மற்றுமொரு தந்தையும் உயிரிழந்துள்ளார்?

காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடி போராடி வந்திருந்த மற்றொரு தந்தையும் உயிரிழந்துள்ளார்.
மட்டக்களப்பின் களுதாவளையை பிறப்பிடமாகக் கொண்ட கணபதிப்பிள்ளை பூபாலபிள்ளை தனது காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன் சிறிதரனை தேடியவாறு இன்று உயிரிழந்துள்ளார்.
தமது உறவுகளை தேடிய வண்ணம் ஏக்கத்தோடும் மிகுந்த பரிதவிப்புடனும் தேடிய உறவுகளில் இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளனர்.
போர் முடிவுற்ற பின்னர் தமது பிள்ளைகளை தமது உறவுகளை நேரடியாக இராணுவத்திடம் கையளித்து ஒரே சாட்சியம் இவ் உறவுகளே என்பது குறிப்பிடத்தக்கது.