பிரபல நடிகர் ஜாக்கி சான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளியான தகவல் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பவர்களுக்கு வெகுமதி அளிப்பதாக பிரபல நடிகர் ஜாக்கி சான் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவருக்கு கொரோனா இருப்பதாகவும், அதற்காக அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது ரசிகர்கள் உலகம் முழுவதிலும் இருந்து முகமூடிகள், அவர் நலம் பெற வேண்டி அட்டைகள் மற்றும் பல பொருட்களையும் அவருக்கு அனுப்பியுள்ளனர்.
இதற்கு தனது இன்ஸ்டாகிராம் மூலம் பதிலளித்துள்ள ஜாக்கி சான் தனக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்றும், எனினும் ரசிகர்களின் அக்கறையை எண்ணி மிகவும் மகிழ்வதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தனக்கு ரசிகர்கள் அனுப்பிய முகமூடிகள் உள்ளிட்ட பொருட்களை கொரோனா பாதித்த மக்களுக்கு அளிக்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த செய்தியை படித்தமைக்கு நன்றி, மீண்டும் வருக! பிரபல நடிகர் ஜாக்கி சானுக்கு கொரோனா தொற்று? அதிர்ச்சியில் ரசிகர்கள்