தேர்தல்;துண்டுபிரசுரங்களிற்கு தடை?

தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது சுவரொட்டிகள் மற்றும்  பதாதைகளை  காட்சிப்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
நாட்டில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “தேர்தல் காலங்களில் சுவரொட்டிகள் மற்றும்  பதாதைகளை காட்சிப்படுத்தினால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும் தற்போதைய நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் நடத்துவற்கு அறிவிக்கப்படுமாயின் அதனை நடத்துவதற்கும் நாம் தயாராகவே இருக்கின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இலங்கை சோஷலிச குடியரசின் 8 ஆவது நாடாளுமன்றத்தின் ஆயுட் காலம் முடிவுக்கு வருகின்ற நிலையில் அதனை கலைப்பதற்கான முழுமையான அதிகாரம் நாளை ஜனாதிபதிக்கு கிடைக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Allgemein