ஜநாவை பொருட்படுத்த தயாராக இல்லாத கோத்தா?

ஐ. நாவிலுள்ள எந்தச் சபையாலும் இலங்கையை எதுவும் செய்ய முடியாதென அமைச்சர் விமல் வீரவன்ச நிராகரித்துள்ளார்.
ஐ. நா மனித உரிமைகள் சபையின் 43 ஆவது அமர்வில் இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கையை முன்வைத்துப் பேசிய மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் ஐ. நா மனித உரிமைகள் சபையின் தீர்மானங்களுக்கான இணை அனுசரணையிலிருந்து இலங்கை விலகும் முடிவைக் கண்டித்ததுடன் உள்ளகப் பொறிமுறையொன்றை நியமிப்பதென்ற இலங்கை அரசின் முடிவையும் அடியோடு நிராகரித்திருந்தார்.
இதுதொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,நாட்டின் பாதுகாப்பு, சட்டங்கள், அரசமைப்பு, காணி விவகாரம், சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்கிய கலப்பு நீதிமன்றம் குறித்துப் பாரதூரமான பரிந்துரைகள் ஐ. நா தீர்மானங்களிலிருந்தபடியாலேயே அதிலிருந்து நாம் விலகியுள்ளோம். ஜனாதிபதி, பிரதமரை மீறி ஐ. நாவால் இலங்கை விவகாரத்தில் தலையிட முடியாது.
ரணில் அரசு போன்று சர்வதேச அரங்கில் இலங்கையை எமது அரசு காட்டிக் கொடுக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Allgemein