வேலை கேட்டு வேலையைகாட்டிய திருடர்கள்

ஹோட்டலுக்கு வேலைத்தேடிவந்த இருவர், அங்கு பணிபுரிந்த மற்றுமொரு ஊழியரின் தொலைபேசியை கொள்ளையடித்த சம்பவமொன்று பதுளையில் இடம்பெற்றுள்ளது.
பதுளையிலுள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை கேட்டு வந்த குறித்த இருவருக்கும் வேலை தருவதாக ஹோட்டல் உரிமையாளர் உறுதியளித்ததையடுத்து தமக்கு தங்குமிட வசதி இல்லை என அவர்கள் கூறியுள்ளனர்.
இதனையடுத்து ஹோட்டலின் மேல் மாடியில் அவர்கள், தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டன என்று ஹோட்டல் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
ஆடை மாற்றிவிட்டு வருவதாக கூறி, மேல்மாடிக்கு சென்ற இருவரும் திட்டமிட்ட அடிப்படையிலேயே இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.
சுமார் 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தொலைபேசியே இவ்வாறு களவாடப்பட்டுள்ளது என பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இருவர் தொடர்பான காட்சிகள் ஹோட்டலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரீ.வி. கமராவில் சிக்கியுள்ளனர்.