பின்லாந்து  தமிழர் பேரவை , கொடையாளர்களின் நிதி அனுசரணையுடன் நில உறுதி வழங்கப்பட்டது

பின்லாந்து  தமிழர் பேரவை , கொடையாளர்களின் நிதி அனுசரணையுடன் பன்னங்கண்டி கிராமத்தில் கமல்(சுந்தர்ராஜன்) குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள சுடர் முன்பள்ளிக்கான காணி நிலம், கொள்வனவு செய்யப்பட்டு, உறுதி வழங்கும் நிகழ்வு கடந்த 26/02/2020 அன்று நடைபெற்றது. சுடர் முன்பள்ளி அபிவிருத்திக் குழு தலைவர் திரு சுப்பையா புவனேந்திரன்(சமாதான நீதவான்) அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், மகளிர் அணித்தலைவி திருமதி வாசுகி சுதாகரன், கல்விக்கரம் உதவி மைய இயக்குனர் கருணாகரன், பிரதேச சபை உறுப்பினர்கள், கிராம அபிவிருத்தி சங்க தலைவர் கோ.மகேந்திரன் , பன்னங்கண்டி கிராமிய அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வின் போது, முன்பள்ளி மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்களை கொண்ட பொதியும் வழங்கப்பட்டது . முன்பள்ளிக்கான காணி கொள்வனவிற்கு நிதி அனுசரணை வழங்கிய , பின்லாந்தில் வாழும் கொடையாளர்களிற்கு எமது உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம். *அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை*.