டி-20 உலகக் கோப்பை அரையிறுதி வாய்ப்பை இழந்த இலங்கை!

மெல்போர்னில் நடைபெற்ற டி-20 உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்று போட்டியில் இலங்கையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ந்து நான்காவது வெற்றியை பதிவு செய்தது இந்தியா.

மேல்போர்னில் நடந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 113 ஓட்டங்கள் எடுத்தது.

அதிகட்சமாக இலங்கை கேப்டன் அத்தபத்து 33 ஓட்டங்கள் எடுத்தார். இந்திய தரப்பில் பந்து வீச்சில் ராதா யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

114 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 14வது ஓவரில் 3 விக்கெட் இழந்த நிலையில் வெற்றி இலங்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. 4 விக்கெட்டுகளை கைப்பற்றிய ராதா யாதவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

குரூப் சுற்றில் விளையாடி நான்கு போட்டியிலும் இந்திய அணி வெற்றிப்பெற்றுள்ளது குறிப்பித்தக்கது. அதேசமயம், 3 போட்டியில் வெற்றிப்பெற்ற நிலையிலே அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்தது.

India top Group A!

An excellent performance sees them beat Sri Lanka by seven wickets with 33 balls remaining ?#T20WorldCup | #INDvSL

??️ https://t.co/pRG3mR1qkU pic.twitter.com/kkxjs7KvpM

— T20 World Cup (@T20WorldCup) February 29, 2020
குரூப் சுற்றில் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்த இலங்கை அணி அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ளது.

குரூப் ‘ஏ’ பிரிவில் இலங்கை, வங்கதேச அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்துள்ள நிலையில், திங்கட்க்கிழமை அவுஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் மோதும் போட்டியில் வெற்றிப்பெறும் அணி அரையிறுதிக்கு தகுதிபெறும்.

Allgemein